விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடு போனது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-09-30 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்துள்ள தொரவளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலன் மனைவி லட்சுமி (வயது 39). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ.32 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுப்போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்