விளாத்திகுளம் அருகே மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
விளாத்திகுளம் அருகே மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராமு (வயது 24). மீனவர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவர், காக்காவலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது
நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் தகவலறிந்தவுடன் சூரங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.