விளாத்திகுளம் அருகே முதியவர் தற்கொலை

விளாத்திகுளம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-12 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 80). கடந்த 15 வருடங்களாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து மாடு தரகு தொழில் செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 4 மகள்கள் இருந்தும் யாரும் தன்னை கவனிக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராமையா கே.சுப்பிரமணியபுரம் விலக்கில் உள்ள மின்மாற்றியில் நூல் கயிற்றினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி சோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

Tags:    

மேலும் செய்திகள்