விளாத்திகுளம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள்

விளாத்திகுளம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-04 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள தத்தனேரி கிராமத்தில் ஊருணி ஆழப்படுத்துதல், சிமெண்டு சாலை அமைத்தல், விவசாய உலர் களம் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கழிப்பிட வசதி அமைத்தல் ஆகியவற்றுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் அருகே உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கழிப்பிட வசதி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாசங்கரி சுரேஷ், லெக்கம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மினி மராத்தான் நடந்தது. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மினி மராத்தான் போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு விளாத்திகுளம் பஸ் நிலையத்திலிருந்து - கழுகாசலபுரம் வரை 16 கி.மீ. தொலைவுக்கும், பெண்களுக்கு விளாத்திகுளம் பஸ் நிலையத்திலிருந்து - பிள்ளையார்நத்தம் வரை 10 கி.மீ. தொலைவுக்கும் மினிமாரத்தான் நடைபெற்றது. விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வாலிபர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஓடினர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்