வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் அருகே அண்ணாமலைப்பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்ரூபமாக அமைந்துள்ளன. இந்த கோவிலில் வாரந்தோரும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று ஆடி அமாவாசையையொட்டி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதனை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்தநிலையில் கோவிலுக்குள் திடீரென 3 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று அங்கு வந்தது. பின்னர் அங்குள்ள சிவ லிங்கத்தின் மீது ஏறி அமர்ந்தது. இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். மேலும் தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்தனா். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.