வருசநாடு அருகேரூ.26 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி

வருசநாடு அருகே ரூ.26 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-03-16 18:45 GMT

வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. எனவே புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் கடந்த மாதம் வாய்க்கால்பாறை சாலை அருகே புதிதாக அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய பொறியாளர் ராமமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்