வரட்டுப்பள்ளம் அணை அருகே குட்டிகளுடன் ரோட்டை கடந்த காட்டுயானைகள்

வரட்டுப்பள்ளம் அணை அருகே குட்டிகளுடன் காட்டுயானைகள் ரோட்டை கடந்தன.

Update: 2023-06-03 21:12 GMT

வரட்டுப்பள்ளம் அணை அருகே ரோட்டை குட்டிகளுடன் காட்டுயானைகள் கடந்து சென்றன.

வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்து உள்ளது. இந்த அணைக்கு பர்கூர் மலைப்பகுதியில் உள்ள புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்ெடருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிடும்.

தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் செடி, கொடிகள் கருகிவிட்டன. மரங்கள் காய்ந்து காணப்படுகின்றன. மேலும் நீர்நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் அந்த பகுதியில் உள்ள ரோட்டை கடந்து செல்வது தொடர்கதையாகி வருகிறது.

ரோட்டை கடந்தன

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்தன. அங்கு தண்ணீரை குடித்துவிட்டு அங்குள்ள அந்தியூர்- மைசூரு ரோட்டை கடந்து சென்றன. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், யானைகளை கண்டதும் தங்களுடைய வாகனங்களை அப்படியே நிறுத்தினர். பின்னர் ரோட்டை கடந்து சென்ற யானைகளை வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைத்து யானைகளும் ரோட்டை கடந்து சென்ற பின்னர் 30 நிமிட நேரம் கழித்து வாகன போக்குவரத்து தொடங்கியது.  

Tags:    

மேலும் செய்திகள்