வல்லநாடு அருகேவிஷம் குடித்த பெண் சாவு

வல்லநாடு அருகே விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-03-28 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் யாதவர் தெருவை சேர்ந்த மாயாண்டி மனைவி இசக்கியம்மாள் என்ற ஔவையார் (வயது 45). இவரது பக்கத்து வீட்டில் வசவப்பபுரம்

செல்லத்துரை மனைவி பேச்சியம்மாள் (56) வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேச்சியம்மாள் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்