வல்லநாடு அருகே ஓட்டலுக்கு மின்கட்டணம் ரூ.60 ஆயிரம் வந்ததால் உரிமையாளர் அதிர்ச்சி

வல்லநாடு அருகே ஓட்டலுக்கு மின்கட்டணம் ரூ.60 ஆயிரம் வந்ததால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Update: 2023-09-22 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள புத்தனேரியைச் சேர்ந்தவர் பூபதிராஜா. இவர் நெல்லை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் வல்லநாடு அருகே வசவப்பபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 3 மின் இணைப்புகள் உள்ளன. அவற்றில் ஒரு மின் இணைப்புக்கு கடந்த மாத மின்கட்டணமாக ரூ.60 ஆயிரத்து 740 செலுத்த வேண்டும் என்று மின்வாரிய கணக்கீட்டாளர் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜா, தனது ஓட்டலில் மின் கணக்கீட்டு மீட்டர் தவறுதலாக வேகமாக ஓடுவதால் அதிகமாக மின்கட்டணம் வந்துள்ளதாக வேதனையுடன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''ஏற்கனவே கடந்த முறை மின்கட்டணமாக சுமார் ரூ.40 ஆயிரம் வந்தது. அதில் ரூ.26 ஆயிரம் டெபாசிட் என்றதால் அந்த தொகை முழுவதையும் செலுத்தினேன். தற்போது மீண்டும் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது. இந்த மின் இணைப்பில் 6 மின்விசிறிகளும், 6 மின்விளக்குகளும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே மின் கணக்கீட்டு மீட்டரை சரி செய்ய வேண்டும். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்'' என்று கூறினார்.

-----

Tags:    

மேலும் செய்திகள்