உத்தமபாளையம் அருகேபெண்ணுக்கு வரதட்சணை கொடுமை :கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

உத்தமபாளையம் அருகே பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-04-21 00:15 IST

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33). இவரது மனைவி பிரதீபா (27). பிரதீபா, தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கும், வேல்முருகனுக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது எனது பெற்றோர் 15 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே வேல்முருகன் அந்த நகைகளை வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கினார். பின்னர் அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருந்ததால் வீட்டை ஜப்தி செய்வதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் அவரது தாயார் மேகலா (60), அண்ணன் சேகர் (40), அண்ணி செல்வபிரியா (35), மற்றொரு அண்ணன் விமல் (45) ஆகிய 5 பேரும் சோ்ந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தி, மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் வேல்முருகன், மேகலா, விமல், சேகர், செல்வபிரியா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்