உப்புக்கோட்டை அருகே ஊராட்சி செயலாளருக்கு கொலை மிரட்டல்

உப்புக்கோட்டை அருகே ஊராட்சி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-12 18:45 GMT

உப்புக்கோட்டை அருகே உள்ள காமராஜபுரம் ஊராட்சி செயலாளராக இருப்பவர் கோபால் (வயது 40). அதே பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (65). இவர்கள் இருவருக்கும் இடையே பஞ்சாயத்து ஊர் களம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இ்ந்நிலையில் நேற்று நடராஜன், கோபாலை தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரபாண்டி போலீசில் கோபால் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்