உளுந்தூர்பேட்டை அருகே 3 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே 3 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் உதயகுமார்(வயது 30) என்பதும், ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து உதயகுமாரை கைது செய்த போலீசார், 3 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.