தூத்துக்குடி அருகேவிபத்தில் டிரைவர் சாவு
தூத்துக்குடி அருகே விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்து போனார்.
புதுக்கோட்டை அருகே உள்ள மேலகூட்டுடன்காட்டை சேர்ந்தவர் செந்தட்டி (வயது 23). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு முடிவைத்தானேந்தலில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அவர் வாகைகுளம் விமான நிலையம் விலக்கு அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கீழே விழுந்து கிடந்தாராம்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் செந்தட்டியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.