தூத்துக்குடி அருகேபொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ குறைகேட்பு
தூத்துக்குடி அருகே பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ குறைகள் கேட்டார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடம், கோரம்பள்ளம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பொதுமக்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மறவன்மடத்தில் இயங்கிவரும் பொது விநியோக கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மனி, வசந்தா, கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.