தூத்துக்குடி அருகே காதல்மனைவியை கொலை செய்த கணவர் கைது
தூத்துக்குடி அருகே காதல்மனைவியை கொலை செய்த கணவர் கைது
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடியில் காதல் மனைவி அடித்து கொலை செய்த கணவனை போலீசார் நேற்று கைது ெசய்தனர். இரவு, பகல் எந்நேரமும் வேறுநபர்களிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
காதல் திருமணம்
தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகரை சேர்ந்தவர் ஜான்ராஜ். இவரது மகன் இம்மானுவேல் அப்துல்லா (வயது 32). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கன்னித்தாய் (30). இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா (4), கஜிதா பிஸ்மி (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனைவி அடித்து கொலை
இந்த நிலையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கன்னி தாயை இம்மானுவேல் அப்துல்லா நேற்று முன்தினம் அடித்து கொலை செய்துவிட்டு, தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முத்தையாபுரம் அருகே உள்ள சூசை நகர் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், அவர் எனது மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள் கடந்த சில நாட்களாக இரவு, பகல் எந்நேரமும் செல்போனில் மணிக்கணக்கில் வேறுநபர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இதனை நான் கண்டித்தேன். எனது பேச்சைக் கேட்காமல் அவர் தொடர்ந்து செல்போனில் பேசியவாறு இருந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை கம்பால் அடித்து கொலை செய்தேன'் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் செய்து ஜெயிலில் அடைத்தனர்.