டி.என்.பாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

டி.என்.பாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-09-22 21:34 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பன். இவருடைய மகன் இளங்கோவன் (வயது 22). கூலித்தொழிலாளி. டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை இளங்கோவன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்தி சென்று இளங்கோவன் திருமணம் செய்ததாக தெரிகிறது. இதன்காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்