திருச்செந்தூர் அருகே பத்திரகாளி அம்மன் கோவிலில் வருசாபிஷேகம்

திருச்செந்தூர் அருகே பத்திரகாளி அம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது.;

Update: 2023-06-05 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே சண்முகபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மைல்கல் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் மற்றும் மஞ்சள் நீர் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் வருசாபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு வருசாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்