திருவள்ளூர் அருகே ரூ.67 லட்சம் மோசடியில் ஈடுபட்டவருக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே ரூ.67 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-09 10:47 GMT

ரூ.1 லட்சம் செலுத்தினால்

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் எஸ்.பி.ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கடந்த 2021-ம் ஆண்டு மணவாளநகர் கணேசபுரம் பொன்னுசாமி தெருவை சேர்ந்த கார்த்திக் (34) என்பவர் டிரேடிங் பிசினஸ் செய்வதாகவும் அந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் அதற்கு மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் 10 மாதங்கள் தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதை நம்பிய தினேஷ்குமார் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கார்த்திக்கின் வங்கி கணக்கில் ரூ.67 லட்சம் வரை செலுத்தியதாக தெரிகிறது.

போலீசில் புகார்

கார்த்திக் சொன்னது போல் அவருக்கு மாதமாதம் கொடுக்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து தினேஷ்குமார் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்