திருக்கோவிலூர் அருகே பஸ் மோதி பெண் சாவு

திருக்கோவிலூர் அருகே பஸ் மோதி பெண் உயிரிழந்தார்.

Update: 2022-12-07 18:45 GMT

திருக்கோவிலூர், 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே உள்ள பார்வதிபுரம் ரெட்டி தெருவை சேர்ந்தவர் அத்தால ராமகிருஷ்ணன் மனைவி அத்தால நாகரத்தினம்(வயது 62). இவர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அக்கம் பக்கத்தினர் சுமார் 40 பேர் சபரிலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு தனியார் பஸ்சில் புறப்பட்டனர். திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள கடையில் சாப்பிடுவதற்காக பஸ்சை நிறுத்தினர். அப்போது அத்தால நாகரத்தினம், சாலையை கடக்க முயன்றபோது, திருச்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்