திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவர் உள்பட 3 பேரை தாக்கியவர் கைது 14 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவர் உள்பட 3 பேரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-10 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாக்ரடீஸ் மகன் சந்தோஷ்(வயது 17). இவர் மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மணலூர்பேட்டையில் உள்ள பள்ளிக்கு பஸ்சில் சென்றபோது, இவருக்கும், சொரையப்பட்டு கிராமத்தை சேர்ந்த புகழ்மணி என்பவரின் தாத்தாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த புகழ்மணி, சந்தோசை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புகழ்மணி, அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்கள் பாஸ்கரன் மகன் பிரவீன்(21), கார்த்தி மகன் சிரஞ்சீவி, பாஸ்கரன் மகன் பிரகாஷ், தினகரன் மகன் தனுஷ், அண்ணாமலை மகன் தமிழரசன், ஞானவேல் மகன் விக்ரம், அஜய், பாபு மகன் புகழ், சங்கர் மகன் பாலா, அண்ணாமலை மகன் சித்துராஜ், அன்னப்பன் மகன் ராகுல், ரவி மகன் விஷ்வா, விக்னேஷ் மகன் விஷால், மூர்த்தி மகன் விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து சந்தோசின் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த சந்தோஷ், அவருடைய தாய் வீரம்மாள், தங்கை மோகனப்பிரியா ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் புகழ்மணி உள்பட 15 பேர் மீது மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்