திருக்கோவிலூர் அருகேவீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு; 4 பேர் பணியிடை நீக்கம்

திருக்கோவிலூர் அருகே வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு ஈடுபட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

Update: 2023-01-05 18:45 GMT

திருக்கோவிலூர் ஒன்றியம் சோழபாண்டியபுரம் கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சோழபாண்டியபுரம் கிராமத்தில் விசாரணை நடத்தினர். அதில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மற்றும் இதர திட்ட பணிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து முறைகேடுகளில் ஈடுபட்ட சோழபாண்டியபுரம் ஊராட்சி செயலாளர் பெருமாள் மற்றும் பணி பார்வையாளர்கள் கலைவாணி, கோவிந்தசாமி, கண்ணன் ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டா் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊராட்சி நிதியில் செலவு சீட்டுகள் இல்லாமல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது மற்றும் நிதி முறையீடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகளை கண்காணிக்க தவறிய அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்