தேனி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் அபேஸ்
தேனி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி அருகே கோடாங்கிபட்டி சாய்பாபா நகரை சேர்ந்தவர் சரண்யா (வயது 32). இவர், தனது ஊரில் நாட்டு சர்க்கரை ஆலை அமைக்க ஏற்பாடு செய்து வந்தார். இதற்கான பொருட்களை வாங்குவதற்காக அவர் தனது ஸ்கூட்டரில் தேனிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வைத்து இருந்த ஒரு பையில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனிசெட்டிபட்டியில் சாலையோரம் பொம்மைகள் விற்பனை செய்வதை பார்த்து அதை வாங்குவதற்காக வாகனத்தை நிறுத்தினார். பொம்மையை பார்த்துக் கொண்டு இருந்தபோது யாரோ மர்ம நபர், ஸ்கூட்டரில் பணம், செல்போன்கள் வைத்திருந்த பையை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.