தேனி அருகேவாலிபர் கை விரலை கடித்த தொழிலாளி மீது வழக்கு

தேனி அருகே வாலிபர் கை விரலை கடித்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2023-05-15 18:45 GMT

தேனி அருகே கோபாலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலா (வயது 29). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரமேஷ் (34) தெருவில் நின்று சத்தம் போடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் ரமேஷ் தெருவில் நின்று சத்தம் போட்டார். அப்போது அவரை பாலா தட்டிக் கேட்டார். இதனால் அவரிடம் தகராறு செய்த ரமேஷ், பாலாவின் கை விரலை கடித்து காயப்படுத்தினார். அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்