தட்டார்மடம் அருகேதீக்காயமடைந்த பெண் சாவு

தட்டார்மடம் அருகே தீக்காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-02-14 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள செட்டியார்பண்ணையைச் சேர்ந்தவர் செல்லப்பா மகள் இசக்கியம்மாள் (வயது 38). இவருக்கு சிறு வயது முதலே நரம்புத் தளர்ச்சி மற்றும் மற்றும் வலிப்பு நோய் இருந்ததால் திருமணம் ஆகவில்லையாம். இதனால் அவருடைய அண்ணன் சங்கர் என்பவர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அவரது தம்பி முருகன் என்பவர் கடந்த 40 நாட்களுக்கு முன் இறந்து போனார். கடந்த 8-ந் தேதி அவரது நினைவு நாளையொட்டி குத்துவிளக்கு ஏற்றி வீட்டில் வைத்துள்ளனர். அப்போது விளக்கேற்றி வைத்தது தெரியாமல் இசக்கியம்மாள் விளக்கு பகுதியில் உள்ள துணியை எடுத்தபோது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்துள்ளது. இதனால் உடலில் தீ பரவியதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் சங்கர், தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்