தட்டார்மடம் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு

தட்டார்மடம் அருகே 2 பேரை அரிவாளால் வெட்டிய மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-11-08 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழி சன்னதி தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் அருண்பாண்டி (வயது 22). சம்பவத்தன்று இவரும், அவரது நண்பர் சுப்பையா மகன் சீனிவாசன் (25) என்பவரும் தட்டார்மடம் பஜாரில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக உடன்குடி தேரியூரைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் சரத் (22), அவரது சகோதரர் சசிக்குமார் (25), மற்றும் உடன்குடி மணிகண்டன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களை அருண்பாண்டியும், சீனிவாசனும் வழி மறித்து எந்த ஊர்? என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் சரத், சசிக்குமார், மணிகண்டன் ஆகிய 3பேரும் அன்று இரவு தாமரைமொழி வந்துள்ளனர். அங்கு அருண்பாண்டியையும், சுப்பையாவையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பக்டர் பவுலோஸ் வழக்குபதிவு செய்து சரத் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்