தட்டார்மடம் அருகேகாரில் மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

தட்டார்மடம் அருகே காரில் மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-29 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் பகுதியில் மிலாது நபியை முன்னிட்டு மதுபானங்கள் விற்க அரசு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மீறி மது விற்பனை நடைபெறுவதாக தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். பள்ளக்குறிச்சி விலக்கு பகுதியில் அவர்கள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உடன்குடியில் இருந்து வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அந்த காரில் 552 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, காரில் இருந்த 2பேரை பிடித்து விசாரித்தனர். இதில், உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் முத்துக்குமார் (வயது 28), குலசேகரன்பட்டினம் கந்தசாமி மகன் சுடலைமணி (42) ஆகியோர் என தெரிய வந்தது. இதுகுறித்து தட்டார்மடம் போலீார் வழக்குப்பதிவு செய்து அந்த 2பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்