தென்திருப்பேரை கோவில் அருகே சேதமடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்

தென்திருப்பேரை கோவில் அருகே சேதமடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது.

Update: 2022-11-03 18:45 GMT

தென்திருப்பேரை:

தென்திருப்பேரையில் குரங்கணி சாலையில் மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில், அழகு முத்தாரம்மன் கோவிலை ஒட்டி உள்ள மின் மின்கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதி சிதைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மிகவும் குறுகிய சாலையில் அமைந்துள்ள இந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. உடனடியாக மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை நடவேண்டும் என்று மின்வாரியத்தினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்