சுல்தான்பேட்டை அருகே சேவல் சூதாட்டம்; 7 பேர் கைது
சுல்தான்பேட்டை அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் நல்லூர் பாளையம் காற்றாலை பகுதியில் சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது, அங்கு சேவல் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டது.
இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புளியம்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 35), மாதவன் (31), சக்திவேல் (38), வட வேடம்பட்டியைச் சேர்ந்த புகழேந்தி (19), சின்னவதம்பச்சேரியைச் சேர்ந்த செல்வசுந்தரம் (51) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரொக்கம் ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.