சங்கராபுரம் அருகே மாவட்ட அளவிலான கலைத்திருவிழா

சங்கராபுரம் அருகே மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது.

Update: 2022-12-07 18:45 GMT

சங்கராபுரம், 

அரசு பள்ளி மாணவர்களின் கலைதிறனை ஊக்குவிக்கும் வகையில் 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நேற்று மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சங்கராபுரம் அருகே உள்ள மேலேரியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ராஜூ, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை வரவேற்றார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 649 அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நடனம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், நுண்கலை வேலைப்பாடு, நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, சுப்பிரமணி, சுரேஷ்பாபு, வேல்முருகன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மையம் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இன்று(வியாழக்கிழமை) 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், நாளை(வெள்ளிக்கிழமை) 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்