சத்தியமங்கலம் அருகேபவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-02-19 22:01 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவர்

சத்தியமங்கலத்தை அடுத்த கோபி புதுப்பாளையம் குப்பாண்டபாளையம் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுடைய மகன் வசந்த் (வயது 19). இவர் கோபி கலை கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் அரசூரில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்று உள்ளார்.

சாவு

முதலில் வசந்த் மட்டும் ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீச்சல் தெரியாததால் அவர் ஆற்று தண்ணீரில் மூழ்கினார்.

இதை கண்டதும் அவருடைய நண்பர்கள் சத்தம் போட்டு கத்தினர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ஆற்றில் இறங்கி வசந்தை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வசந்த் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்