சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

Update: 2022-10-20 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள செம்மண்குடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (39). தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த குணசிங் மகன் டேவிட், அவரது சகோதரர் ராஜ் ஆகியோர் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை சக்திவேலின் வீட்டருகில் வீசிசென்றனர். இதனை சக்திவேல் தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த இருவரும் சக்திவேலை தாக்கியதுடன் கொலைமிரட்டல் விடுத்தனர். இது குறித்தபுகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தன்ராஜ் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவந்தார். அந்த இருவரும் திருப்பூருக்கு சென்று பாத்திரக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்த டேவிட்டை போலீசார் கைது செய்தனர். அவரது சகோதரர் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்