சாத்தான்குளம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

சாத்தான்குளம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-11-06 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே நொச்சிக்குளம் பகுதியில் கஞ்சாவை சிலர் பதுக்கி வைத்து விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் நொச்சிகுளம் காட்டு பகுதியில் பதுங்கிய வாலிபர் ஒருவர் தப்பி ஓடினர். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி திரேஸ்புரம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ராகேஷ் (வயது 31) என தெரிந்தது. அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகேஷை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்