சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் திடீர் தீ விபத்து
சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே விஜயராமபுரம் செல்லும் சாலையில் டாக்டர் ஆசீர்வாதம் மனோகரன் என்பவரது தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து வேலியில் நேற்று காலையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி, தோட்டத்திலுள்ள மரங்களிலும் பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.