சாத்தான்குளம் அருகே சூதாடிய 4 பேர் கைது
சாத்தான்குளம் அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பண்டாரபுரம் இசக்கியம்மன் கோவில் பகுதிக்கு விரைந்து ெசன்றனர். அப்போது அங்கு கும்பல் ஒன்று காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. போலீசாரை பார்த்தவுடன் சூதாடிய 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கிருபாபுரம் ராமச்சந்திரன்(வயது 55), சங்கரன்குடியிருப்பு சிவகணேசன் (39), பண்டாரபுரம் வேல்துரை (73), கிருபாபுரம் ஜம்பு (35) ஆகியோர் என தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் போலீார் அந்த 4 பேரையும் கைது ெசய்து, அவரிகளிடமிருந்து சீட்டு கட்டு, ரூ.1,400-ஐ பறிமுதல் செய்தனர்.