சாத்தான்குளம் அருகே 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தான்குளம் அருகே 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-25 18:45 GMT

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் சாத்தான்குளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை செல்லும் ரோட்டில் பண்டாரபுரம் அருகே ரோட்டோரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் ஒரு சரக்கு வாகனம் விபத்தில் சிக்கி கவிழ்ந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சுமார் தலா 40 கிலோ எடை கொண்ட 45 மூட்டைகளில் மொத்தம் 1800 கிலோ ரேஷன் அரிசி இருந்தன. இதனை தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேஷன் அரிசியை கடத்தி சென்றதாக, நெல்லையை சேர்ந்த முத்துக்குமார், திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்த செல்லத்துரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்