சம்பத்நகர் உழவர் சந்தை அருகே பூட்டிக்கிடக்கும் சிறுவர் பூங்கா திறக்கப்படுமா?

சம்பத்நகர் உழவர் சந்தை அருகே பூட்டிக்கிடக்கும் சிறுவர் பூங்காைவை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்ைவிடுத்துள்ளனா்.

Update: 2023-10-22 20:18 GMT

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தை அருகே உள்ள பூங்காவை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சிறுவர் பூங்கா

ஈரோடு மாநகராட்சி சம்பத்நகர் உழவர் சந்தை அருகே மாநகராட்சி சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவை அந்த பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செல்பவர்கள் இந்த பூங்காவுக்கு சென்று வந்தனர்.

இதுபோல் மாலை நேரத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் சென்று பொழுதுபோக்கி வந்தனர். கொரோனா காலத்தில் சிறுவர் பூங்கா மூடப்பட்டது. பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே பூங்காவை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொழுதுபோக்கு

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் கூறியதாவது:-

நான் சம்பத்நகரில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். முன்பு எனது குழந்தைகளை இந்த பூங்காவுக்கு அழைத்து வந்து விட்டுவிடுவேன். அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள். கொரோனாவுக்கு பிறகு, பலரும் இங்கு வந்து விட்டு பூங்கா திறக்காததால் திரும்பி போகிறார்கள். இதுபோன்ற குடியிருப்பு பகுதிகளில் பூங்காக்கள்தான் ஒரே பொழுதுபோக்காகும். எனவே இந்த பூங்காவை திறக்க வேண்டும்.

திறக்க வேண்டும்

அந்த பகுதியை சேர்ந்த கல்பனா கூறியதாவது:-

நான் சம்பத்நகரில் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். எங்கள் பகுதியில் பலருக்கும் இந்த பூங்காதான் பொழுதுபோக்கு இடமாக இருந்தது.

இதை மீண்டும் திறப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருக்கிறோம். ஆனால் அதற்கான அறிகுறி இல்லை. பூங்காவின் உள்ளே புதர்கள் மண்டி உள்ளது. விளையாட்டு பொருட்களும் வீணாகி வருகின்றன. எனவே பூங்காவை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்