புஞ்சைபுளியம்பட்டி அருகேதிம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
.புஞ்சைபுளியம்பட்டி அருகே திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் eil
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கீழ் முடுதுறையில் பிரசித்தி பெற்ற திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கருட வாகனம், குதிரை வாகனம், சப்பர வாகனங்களில் சாமி உற்சவர் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் திம்மராய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள், கும்ப பூஜைகள் நடந்தது. இதையடுத்து ரக்சாபந்தனம் நடைபெற்று சாமிகளுக்கு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலில் உலா வந்தனர்.