புதுக்கோட்டை அருகேகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே கீழத்தட்டப்பாறையில் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பிறகு வழக்கம் போல் நிர்வாகிகள் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் மீண்டும் கோவிலை திறக்க வந்த போது, கோவில் உண்டியலை யாரோ மர்ம ஆசாமி கடப்பாரையால் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதில் சுமார் ரூ.15 ஆயிரம் வரை உண்டியல் பணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அந்தகோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் 2 பேர் கோவிலுக்குள் வருவது பதிவாகி உள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.