கம்பம் அருகே குடோனாக மாறிய அம்மா உடற்பயிற்சி கூடம்

கம்பம் அருகே அம்மா உடற்பயிற்சி கூடம் குடோனாக மாறியது.

Update: 2023-06-27 18:45 GMT

தமிழகம் முழுவதும் விளையாட்டு மைதான வசதி இல்லாத கிராமங்களில் உள்ள இளைஞர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்வதற்கும், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஒவ்வொரு கிராமங்களிலும் அனைத்து வசதியுடன் கூடிய அம்மா உடற்பயிற்சி கூடம் கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. அதன்படி, கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசமரம்தெரு அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு மேற்கொள்ளாததால் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் உடற்பயிற்சி கூடம் பயன்பாடின்றி காணப்பட்டது. தற்போது அந்த உடற்பயிற்சி கூடம் குடோனாக மாறியுள்ளது. எனவே உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவில் பராமரிப்பு செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்