கம்பம் அருகே சாமாண்டியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கம்பம் அருகே சாமாண்டியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2022-12-10 18:45 GMT

கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் பிரசித்தி பெற்ற சாமாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமாண்டியம்மன் மூலவராக காட்சி அளிக்கிறார். ஆண்டுதோறும் இங்கு பங்குனி மாதத்தில் 3 நாட்கள், ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்நிலையில் நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, சாமுண்டீஸ்வரி அம்மன் மூல மந்திரம், ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்