பெருந்துறை அருகே தூக்குப்போட்டு வடமாநில சிறுமி தற்கொலை

தற்கொலை

Update: 2022-09-23 19:30 GMT

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ரம்ஜன் மியன். (வயது 48). இவருடைய மனைவி தமினா பீவி (40). இவர்களுடைய மகள் மெஹ்ரூண் கதுன் (13), மகன் பிரோஜ் அன்சாரி (12). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரம்ஜன் மியன் தனது குடும்பத்துடன் பெருந்துறையை அடுத்த கடப்பமடை பகுதிக்கு வந்து வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இதில் ரம்ஜன் மியன், அவருடைய மனைவி தமினா பீவி ஆகியோர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் கணவன், மனைவி 2 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த அவர்களுடைய மகள் மெஹ்ரூண் கதுன், அங்குள்ள குளியல் அறைக்குள் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் சிறுமி மெஹ்ரூண் கதுன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை செய்து கொண்டதும்,' தெரியவந்துள்ளது. எனினும் போலீசார் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்