பெருந்துறை அருகேகீழ்பவானி வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்தது
பெருந்துறை பெத்தாம்பாளையம் அருகே உள்ள நரிப்பாளையம் வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் தண்ணீரில் ஆண் பிணம் ஒன்று நேற்று மிதந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வாய்க்காலில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பிணமாக மிதந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். உடலில் துணிகள் இல்லை. அவர் யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்?, வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா? அல்லது வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.