பெரியார் பஸ் நிலையம் அருகேஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
பெரியார் பஸ் நிலையம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்;
மதுரை திடீர்நகர் போலீசார் பெரியார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாநகராட்சி கட்டண கழிப்பறை அருகே சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதை கண்டனர். உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் திடீர்நகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 23), ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் ஹரி (23), பசுமலை எபிநேசர் தினேஷ்குமார் (23), மேலவாசல் அஜித் (25), திடீர்நகர் சண்முகபாண்டி (22) என்பதும், அவர்கள் ஆயுதங்களுடன் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.