பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
பெரியகுளம் அருகே வடுகப்பட்டி பேரூராட்சியில் காமக்காபட்டிக்கு செல்லும் சாலை அருகே உள்ள கல்லாமுத்து பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் உரக்கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த பணி செயல் அலுவலர் அம்புஜம், பேரூராட்சி தலைவர் நடேசன், தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி பாபு ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.