பெரியகுளம் அருகே ரேஷன் கடையில் திருட்டு

பெரியகுளம் அருகே ரேஷன் கடையில் திருட்டு போனது.;

Update: 2022-11-24 18:45 GMT

பெரியகுளம் அருகே நேரு நகரில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக, தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்த அழகர் (வயது 43) என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 18-ந் தேதி இவர், கடையில் உள்ள பொருட்களை சரி பார்த்து விட்டு பூட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு ரேஷன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்ததாக அழகருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக அவர் கடைக்கு வந்தார். அப்போது கடைக்குள் 3 பேர் திருடி கொண்டு இருந்தனர். இதையடு்த்து அவர் சத்தம் போட்டார். இதைக்கேட்ட மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது 2 மூட்டை சர்க்கரை, 5 மூட்டை பருப்பு திருடுபோய் இருந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அழகர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்