பெரியகுளம் அருகேதொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு

பெரியகுளம் அருகே ெதாழிலாளி வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் ே்தடி வருகின்றனர்.;

Update:2023-03-17 00:15 IST

பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா நகரை சேர்ந்தவர் வேத சவரி (வயது 45). கட்டிட தொழிலாளி. கடந்த 14-ந் தேதி இவர், வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்கிருந்த கூரையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் வேதசவரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்