பெரியகுளம் அருகே கார் வாங்குவது போல் நடித்து ஓட்டி சென்ற 3 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே கார் வாங்குவது போல் நடித்து ஓட்டி சென்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-10-08 17:01 GMT

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி ராஜேந்திரபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகாா் கொடுத்தார். அதில் நான் அரசு வாகனங்களை ஏலம் எடுத்து அதனை விற்கும் தொழில் செய்து வருகிறேன். கடந்த மாதம் 29-ந்தேதி எனது வீட்டிற்கு தேனி அருகே உள்ள தர்மபுரியை சேர்ந்த ஈஸ்வரன், அல்லிநகரத்தை சேர்ந்த செந்தில், தாடிச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 3 பேர் கார் வாங்க வந்தனர். அப்போது அவா்கள் கார் வாங்குவது போல் நடித்து ஓட்டி சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்