பெரியகொடிவேரி அருகே கணவர் இறந்த வேதனையில் மனைவி தற்கொலை

தற்கொலை

Update: 2022-09-21 19:30 GMT

டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நேதாஜி வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி திலகா (வயது 51). இவர்களுடைய மகன் விஜய் (27). இந்தநிலையில் பெருமாள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

திலகாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதில் கணவரும் இறந்துவிட்டதால் பெரும் வேதனைக்கு ஆளானார்.

இந்தநிலையில் நேற்று மதியம் விஜய் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது திலகா மயங்கிய நிலையில் கிடந்தார். அருகே விஷ மருந்து பாக்கெட்டும் கிடந்தது. இதனால் தாய் விஷம் குடித்துவிட்டதை தெரிந்துகொண்ட விஜய் உடனே திலகாவை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே திலகா இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்