பர்கூர் போலீஸ் நிலையம் அருகே உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு

பர்கூர் போலீஸ் நிலையம் அருகே உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-31 21:32 GMT

அந்தியூர்

அந்தியூரை அடுத்த பர்கூரில் போலீஸ் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த போலீஸ் நிலையம் அருகே காட்டு யானை ஒன்று உலா வந்தது. யானையை கண்டதும் அங்குள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அலறி அடித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.

மேலும் யானையை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த தெரு நாய்கள் கூடிநின்று குரைத்தன. இதுபற்றி அறிந்ததும் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி யாைனயை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்