பெண்ணாடம் அருகே ரெயில் தண்டவாளத்தில் டீ மாஸ்டர் பிணம் போலீசார் விசாரணை

பெண்ணாடம் அருகே ரெயில் தண்டவாளத்தில் டீ மாஸ்டர் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-10 16:43 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பாா்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி கிராமத்தில் உள்ள திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த ஜான்சன்(வயது 60) என்பதும், முருகன்குடியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜான்சனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சன் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்